News April 25, 2024

கடும் நெருக்கடியில் ‘Koo’ செயலி

image

இந்தியாவில் ட்விட்டருக்குப் போட்டியாக 2019ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட ‘Koo’ செயலி, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து மொத்த பணியாளர்களில் 80% பேரை நீக்கம் செய்த நிலையில், தற்போது சுமார் 50 பேர் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் 40% சம்பளமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போது அதையும் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 8, 2026

மார்ச் 8: வரலாற்றில் இன்று

image

*1908 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான திருநெல்வேலி எழுச்சி போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். *1911 – சர்வதேச மகளிர் தினத்திற்கான தீர்மானம் முதல்முதலாக நிறைவேறியது. *1989 – இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிறந்த தினம். *1934- தமிழ் எழுத்தாளர் ML தங்கப்பா பிறந்த தினம். *1972- பாலிவுட் நடிகர் தருண் போஸ் நினைவு தினம்.

News March 8, 2026

7 நாட்களில் நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள்

image

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி போக்குவரத்து ஓரளவு திறக்கப்பட்டதன் மூலம் விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்குகின்றன என்றும், மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வளைகுடா நாடுகளில் இருந்து 52,000 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News March 8, 2026

டி20 WC பைனலில் முதல்முறையாக இந்தியர்கள்!

image

தற்போதைய இந்திய அணியில் உள்ள 6 வீரர்கள் முதல் முறையாக டி20 WC பைனலில் விளையாட இருக்கிறார்கள். அதன்படி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா. ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர். ODI WC, சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பங்கேற்ற போது டி20 பைனலில் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!