News April 25, 2024
சொமட்டோவில் வருகிறது புதிய வசதி

கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்வதற்கான சோதனையில் சொமட்டோடோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தச் சேவை தற்போது பெங்களூரு மற்றும் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 16 முதல் 21 நிமிடத்திற்குள் உங்களின் ஆர்டர் கைக்கு வர ரூ.29 கூடுதலாகச் செலுத்த வேண்டும். இந்தக் கூடுதல் கட்டணம் ‘சொமட்டோ கோல்ட்’ சப்ஸ்கிரைபருக்கும் பொருந்தும்.
Similar News
News March 7, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹720 உயர்வு!

கடந்த 5 நாள்களாக சரிவைக் கண்டு வந்த தங்கம், இன்று திடீரென உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹15,050-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹720 அதிகரித்து ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையானது மாற்றமின்றி ஒரு கிராம் ₹290-க்கு விற்பனையாகிறது.
News March 7, 2026
நயினார் மீது கே.பி.ராமலிங்கம் அதிருப்தி

சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவில் உள்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. நேற்று மாலை தர்மபுரம் ஆதீனத்தை சந்தித்த போட்டோவை நயினார் தனது X-ல் பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழ், ஆன்மிகத்தில் ஈடுபாடு தேவைதான்; அதேநேரத்தில் இயக்கத் தோழர்களின் நலனிலும் அக்கறை காட்டுவது தேர்தல் நேரத்தில் அவசியம் என பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கமெண்ட் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
News March 7, 2026
கணவருக்கான தகுதிகள்.. மனம் திறந்த விஜய் பட நடிகை!

GOAT, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை மீனாட்சி செளத்ரி, தனது வருங்கால கணவருக்கான தகுதிகள் குறித்து பேசியது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தன்னை திருமணம் செய்யும் நபருக்கு குறைந்தது 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். சமையல், துணி துவைத்தல், இஸ்திரி செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு நான் ரெடி என பலரும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


