News November 26, 2025

கடலூர்: மயங்கி விழுந்துவர் உயிரிழப்பு

image

வடலூர் அடுத்த வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (70). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று மாலை மருத்துவமனை செல்வதற்காக பஸ்ஸில் வந்து வடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 27, 2025

BREAKING: கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.29) மிக கண்மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!

News November 27, 2025

கடலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 27, 2025

கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

image

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!