News November 26, 2025
உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு முக்கிய உத்தரவு

நகை திருட்டு தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத பட்சத்தில், பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போலீசார் முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களுக்குள், நகையின் மொத்த மதிப்பில் 30% தொகையை இழப்பீடாக வழங்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க திறமைமிக்க அதிகாரிகளை நியமிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News November 27, 2025
மதுரை: புதிய ரயில் நிலையத்தில் இதெல்லாம் வருகிறதா?

ரூ. 347.47 கோடியில் மதுரை கிழக்கு,மேற்கு பகுதி ரயில் முனைய கட்டடங்கள், பார்சல் போக்குவரத்திற்கான புதிய தனி நடைமேம்பாலம், மேற்கூரையுடன் கூடிய பாதசாரிகள் நடைபாதை, ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதை, ரயில் நிலைய கிழக்கு நுழைவாயிலின் ஒரு புதிய பல்லடுக்கு 4 சக்கர வாகன காப்பகம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.
News November 27, 2025
மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News November 27, 2025
மதுரை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை மேலுார் தனியாமங்கலத்தை சேர்ந்தவர் குமரேசன் 42. ஆந்திராவில் இருந்து ஒரு வாகனத்தில்130 கிலோ கஞ்சாவை கடத்தி தேனி-பெரியகுளம் ரோடு மதுராபுரியில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2017ல் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சிறப்பு தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குமரேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை,ரூ.3 லட்சம் விதித்து நீதி தீர்ப்பு அளித்தார்.


