News April 25, 2024
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அறிவிப்பிற்கு காத்திருப்பு

நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளில் முழுமையாக சேர்க்கை செயல்பாடுகள் ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. எனினும் இதுவரை மாணவர் சேர்க்கை தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வியிடம் கேட்டபோது இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.
Similar News
News March 5, 2026
கோவை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<
News March 5, 2026
கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 5, 2026
பொள்ளாச்சி: தட்டி தூக்கிய அதிமுக!

பொள்ளாச்சி தேவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் அக்கட்சிகளிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் வ.ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இம்மாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.


