News November 26, 2025
வேலூரில் இன்று வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் (scrab) இன்று (நவ.26) தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
வேலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News March 13, 2026
வேலூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

வேலூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 13, 2026
வேலூர்: சிலிண்டர் புக் செய்வது இனி ஈஸி!

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.SHARE!


