News November 26, 2025

திண்டுக்கல்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 25, 2026

திண்டுக்கல்: 45 – 101 வயது.. வாக்காளர் அதிர்ச்சி!

image

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் சௌந்தர்ராஜன் (45), 1980-ல் பிறந்தவர். ஆனால், எஸ்ஐஆர் குளறுபடியால் வயது 101 என பதிவாகி, ‘சீனியர் சிட்டிசன்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனையறியாமல் பிஎல்ஓ பணியாளர்கள் தபால் வாக்கு பெறுவதற்கான ஒப்புதல் படிவத்தை வழங்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த தவறை உடனடியாக சரிசெய்ய மாவட்ட ஆட்சியருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கத்திகுத்து சம்பவத்தில் 6 பேர் கைது

image

நத்தம் அருகே சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் சிவா (27). சிறுகுடி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரதீப்(23). இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் வாகனம் செல்வதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பினர் நத்தம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நத்தம் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!