News April 25, 2024
சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்.26, 27இல் நாகை, வேளாங்கண்ணி, ஓசூருக்கு 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோட்டுக்கு 200 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
Similar News
News November 13, 2025
அல்-ஃபலா பல்கலை.,க்கு தடை விதித்த AIU

ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலை.,யின் உறுப்பினர் நிலையை தற்காலிகமாக ரத்து செய்வதாக அனைந்திந்திய பல்கலை. கூட்டமைப்பு (AIU) அறிவித்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பின் பின்னணியில், அல்-ஃபலாவில் பணியாற்றிய டாக்டர்கள் உமர் உன் நபி, முசாமில் ஷகீல் இருவரும் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பல்கலை., மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக AIU தெரிவித்துள்ளது.
News November 13, 2025
ஒரு ரூபாய் கூட கட்சியில் பெற்றதில்லை: அண்ணாமலை

நான் சுயமாக வணிகம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எனது குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நான் தொழில் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட சில பகுதிகளுக்கு SIR பொறுப்பாளராக உள்ள நான், அங்கு செல்வதற்கான செலவையும் நானே செய்ய வேண்டும், கட்சியிலிருந்து ₹1 கூட பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.
News November 13, 2025
ஐபிஎல் டிரேடிங்: டாப் -5 வீரர்களின் லிஸ்ட்

ஹர்திக் பாண்ட்யா டிரேடிங்கிற்கு அடுத்தபடியாக இம்முறை ஐபிஎல் வீரர்கள் டிரேடிங் அதிக கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் சொதப்பிய அணிகள், தங்களை வலுப்படுத்திக் கொள்ள வீரர்களை டிரேட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில், அதிக தொகைக்கு டிரேட் செய்யப்பட்ட வீரர்களின் விவரங்களை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.


