News November 26, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்தது

image

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹11,800-க்கும், சவரன் ₹640 உயர்ந்து ₹94,400-க்கும் விற்பனையாகிறது. <<18390417>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில், நேற்று சவரனுக்கு ₹1,600, இன்று ₹640 என 2 நாள்களில் மட்டும் ₹2,240 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. SHARE IT.

Similar News

News November 26, 2025

சற்றுமுன்: அதிமுக மூத்த தலைவர் காலமானார்

image

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், விருதுநகர் Ex மாவட்டச் செயலாளருமான விநாயகமூர்த்தி(63) உடல்நலக்குறைவால் காலமானார். கட்சியின் மீது தீவிர விசுவாசம் கொண்ட அன்புச் சகோதரரின் இழப்பு வேதனையளிப்பதாக EPS இரங்கல் தெரிவித்துள்ளார். விநாயகமூர்த்தி, அதிமுகவில் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

News November 26, 2025

நெஞ்சை உலுக்கும் தீ விபத்து (PHOTOS)

image

ஹாங்காங்கில் 3 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தீப்பற்றி எரிகின்றன. இதுவரை, 13 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பற்றி எரியும் காட்சிகள், நமது நெஞ்சை பதைபதைக்க செய்கிறது. நெஞ்சை உலுக்கும் போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

News November 26, 2025

செங்கோட்டையனை இயக்கும் பாஜக? திருமாவளவன்

image

அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக அமையும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை, ஆனால் அவருடைய செயல்பாடுகளின் பின்னணியில் RSS, பாஜக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் BJP செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!