News November 26, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மீஷோ செயலி, (Meesho) வில் ஏதேனும் பொருள் வாங்கிய பின் உங்கள் முகவரிக்கு, அல்லது whatsappக்கு மீஷோவில் இருந்து (lucky drawn gift win) என்று ஆங்கிலத்தில் நீங்கள் வென்று இருப்பதாக கூறி உங்களை பணம் அனுப்பும் படி கூறினால், பணம் அனுப்பி ஏமாறாதீர்கள், மேலும் சந்தேகங்களுக்கு சைபர் கிரைம் தொடர்பு எண் 1930 ல் (அ) https://www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
Similar News
News March 4, 2026
கிருஷ்ணகிரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News March 4, 2026
கிருஷ்ணகிரியில் அதிரடி காட்டிய ஆட்சியர்!

ஓசூரில் இராமநாயக்கன் ஏரி அருகே சுமார் 582 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நேற்று (மார்ச்-3) ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News March 4, 2026
கிருஷ்ணகிரியில் தட்டி தூக்கிய பாஜக!

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தெற்கு மண்டல தலைவர் மூர்த்தி தலைமையில் நேற்று 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர். ஆதிதொட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.


