News November 26, 2025
சேலம்: கலைத் திருவிழாவில் 5138 பேர் பங்கேற்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் நாளை மாநில அளவிலான கலைத் திருவிழா தொடங்க உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 5,138 மாணவர்கள் பங்கேற்கின்றனர். அமைச்சர் மற்றும் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இந்த போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Similar News
News November 28, 2025
சேலம்: டிச.13- ல் ‘மக்கள் நீதிமன்றம்’

சேலம் மாவட்டத்தில் ‘தேசிய மக்கள் நீதிமன்றம்’ வரும் டிச.13-ஆம் தேதி நடக்க உள்ளது. அதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்துக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற முன் வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் இலவசமாக தீர்வுக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
சேலம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 28, 2025
சேலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.5 லட்சம் திருட்டு

சேலம் அருகே கூட்டாத்துப்பட்டியில் மேஸ்திரி நாராயணசாமி குடும்பம். நேற்று உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்த போது, அவர்கள் வீட்டு பூட்டு உடைத்து, பீரோவை உடைத்து ரூ.5 லட்சம் பணம், 1 1/2 பவுன் நகை மற்றும் 70 கிராம் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். திருடர்கள் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி பதிவு கருவியையும் எடுத்துச் சென்றது காரிப்பட்டி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


