News November 26, 2025

திருவள்ளூரில் மழை கொட்டப் போகுது!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 29, 30 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 18, 2026

திருவள்ளூர் வட்டாட்சியர் எண்கள்

image

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 18, 2026

திருத்தணி: வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்!

image

திருத்தணி: கூளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (30), வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது குடும்பம் தனியாக வசித்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு தூங்க சென்ற ராஜசேகர், நேற்று காலை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2026

அரசு பள்ளி ஆசிரியரிடம் நகை பறித்தவர் கைது

image

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அவரது குழந்தைகளை அழைத்துச் செல்ல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அப்போது மர்மநபர் இருவர் பைக்கில் வந்து ஆசிரியையிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகையை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் இன்று சிப்காட் போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷானவாசை கைது செய்தனர்.

error: Content is protected !!