News April 25, 2024

சிறப்பு வாய்ந்த பழங்குடியினர் அருங்காட்சியகம்!!

image

பழங்குடியினர் அருங்காட்சியகம், உதகையில் மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகம் கி.பி 1989 -1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், பழங்குடியினரின் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகும். இதில் தமிழகத்தில் வாழும் 36 வகை பழங்குடியினரின் ஆபரணங்கள், வேட்டைக்கருவிகள், வீட்டுப்பொருட்கள், மாதிரி வீடுகள் விவசாய கருவிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

Similar News

News December 16, 2025

நீலகிரி: 8வது போதும்… ஊரக வளர்ச்சித்துறையில் வேலை!

image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

கோத்தகிரியில் அதிரடி கைது!

image

கீழ் கோத்தகிரி கெங்கரை மந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(48). இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஷீலா(45) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீலா தனது 2வது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், சத்திரசேகர் தனது மனைவியை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கிடைத்த புகாரின் பேரில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 16, 2025

குன்னூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட பணிகள் மற்றும் குன்னூர் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!