News November 26, 2025
ஜனநாயகத்தின் அடித்தளம் உதித்த நாள் இன்று!

இந்தியா எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி உதித்த நாள் இன்று. சுதந்திர இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் நீதி, சமத்துவம் & சுதந்திரத்தைப் பாதுகாக்க ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டிருந்த சட்டம் போதுமானதாக இல்லை. இதனால் அம்பேத்கரின் தலைமையில் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்களில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1949-ம் ஆண்டு நவம்பர் 26 தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Similar News
News March 8, 2026
இன்று ஒரு நாள் கொண்டாடி விட்டால் போதுமா..?

இன்று முழுவதும் பெண்களுக்கு வாழ்த்துகள்தான்! ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதா? இன்னும் சில கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை தரும் மனப்போக்கு தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் அரங்கேற போகிறது? வாழ்த்துகளால் அல்ல, சமத்துவத்தால் தான் பெண்கள் தினம் முழுமை பெறும் என்பதை இந்த சமூகம் உணரப்போவது எப்போது?
News March 8, 2026
இன்று பைனல்.. உச்சம் தொட்ட கட்டணம்!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் WC T20I இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி படையெடுத்துள்ள நிலையில், ஹோட்டல் ரூம் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு ₹18 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம். அதே போல முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
News March 8, 2026
டாடா கார்கள் விலை ₹47,500 குறைந்தது

கார் வாங்க காத்திருப்போருக்கு மார்ச் ‘CARNIVAL’ என்ற பெயரில் டாடா நிறுவனம் சிறப்பு விலை குறைப்பை அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் புக்கிங் செய்வோருக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு சலுகை கிடைக்கும் எனவும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தெந்த கார்கள், எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலது பக்கமாக SWIPE செய்து பாருங்கள்.


