News November 26, 2025

இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

image

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 27, 2025

ராம்நாடு: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 27, 2025

ராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில்

image

ராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி டிச.02, 09 ஆகிய தேதிகளில் இராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10 க்கு திருப்பதி சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து டிச.03,10 ஆகிய தேதிகளில் காலை 11:15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 இராமேஸ்வரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

News November 27, 2025

ராமநாதபுரம்: SIR லிஸ்ட் ரெடி.. உடனே CHECK பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க.
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!