News November 26, 2025

இப்படி விளக்கேத்துங்க.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

image

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில் பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து செல்வத்தை கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது.

Similar News

News March 24, 2026

நாகையில் இப்படி ஒரு இடமா!

image

நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பிரலபன சுற்றுலா பகுதியாக அறியப்படுகிறது. இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க சோழர்களின் துறைமுகம் மற்றும் அதன் கலங்கரை அமைந்திருந்தது. பின்னர் 2004-யில் ஏற்பட்ட சுமானியின் போது முழுமையாக பாதிக்கப்பட்டு, கலங்கரையின் எஞ்சிய பகுதிகள் மட்டுமே உள்ளது. மேலும் இங்கிருந்துதான் ராமர் இலங்கையை பார்த்ததாக இதிகாசத்தில் கூறப்படும் ராமர் நின்ற இடத்தில் அவரது பாதமும் உள்ளது. SHARE IT

News March 24, 2026

தேர்தல் கருத்துக்கணிப்பு.. சற்றுமுன் அறிவிப்பு

image

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட ECI கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்.9-ம் தேதியும், TN-ல் ஏப்.23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என ECI உத்தரவிட்டுள்ளது.

News March 24, 2026

BREAKING: விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

image

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 தனித் தொகுதிகளிலும், 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக ‘பானை’ சின்னத்தில் போட்டியிட உள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக, தற்போது கூடுதலாக 2 தொகுதிகளில் களமிறங்க உள்ளது. முன்னதாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு திருமாவளவன் அழுத்தம் கொடுத்து வந்தார்.

error: Content is protected !!