News November 26, 2025
கலாசாரத்தை சிதைக்கும் மார்க்ஸியவாதிகள்: RN ரவி

கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும் சிதைப்பதாக கவர்னர் RN ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியர்கள் பசுவையும், குரங்கையும் வழிபடுவதால், ஏகாதிபத்தியம் அவர்களுக்கு தேவை என கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய வரலாற்றை தேடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 18, 2026
காங்., திமுகவினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி திமுக – காங்., கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பம் எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அப்படி இருக்கையில், பங்குனி அமாவாசை என்பதால் காங்கிரஸ், திமுகவினர் போட்டிபோட்டு அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக, திமுக சார்பில் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காத நிலையில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
News March 18, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 18, 2026
சினிமா ஸ்டார்கள் OTT தொடர்களில் நடிக்கக்கூடாது..

சில முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் OTT படங்கள், சீரிஸ்களில் நடிப்பதால்/இயக்குவதால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது. இதனால், முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


