News November 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News March 18, 2026
சர்ச்சை பேச்சு… நயன்தாரா பதிலடி

அன்பு குறித்த ஒரு தத்துவ வரியை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக நயன்தாரா பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது. அதில், ‘மழை எங்கு, யார் மீது விழுகிறோம் என்று பார்ப்பதில்லை. அதுபோலத்தான் உங்கள் அன்பு இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசிய Ex அமைச்சர் <<19406314>>CV சண்முகத்திற்கு<<>> தான் நயன்தாரா இப்படி சைலெண்டாக பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
News March 18, 2026
தமிழகத்தில் ₹42.65 கோடி பணம், பொருள்கள் சிக்கின

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 3 நாள்களுக்குள் ₹42.65 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். சோதனையில் ₹2.37 கோடி ரொக்கம், ₹2.88 கோடி போதைப் பொருள்கள், ₹16.42 கோடி உயர் ரக உலோகங்கள், ₹20.80 கோடி இலவச பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கத்தை திரும்பி பெற்றுக்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 18, 2026
ஆபாசங்களை இறைக்கும் அதிமுகவினர்: CM ஸ்டாலின்

CV சண்முகம், திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சுகளுக்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் மேடைகளில் தமிழகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சாதனைகள் பற்றி பேசப்படுவதாகவும், மறுபுறம் ஆபாசங்கள், அவதூறுகள் இறைக்கப்படுவதாகவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். 2 மேடைகளில் எது தமிழகத்துக்கான மேடை என சிந்தித்து, வளர்ச்சியை தரும் விடியலையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


