News November 26, 2025
CINEMA 360°: புதிய ஆட்டத்தை தொடங்கும் அனிருத்

*அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக்டவுன் படத்தின் கனா என்ற பாடல் வெளியாகியுள்ளது. *இசையமைப்பாளர் அனிருத் புதிதாக இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.*மாநாடு படம் வெளிவந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் கொண்டாடினர். *ராமநாதபுரத்தில் நடைபெறும் ‘D54’ பட ஷூட்டிங்கில் தனுஷ் இணைந்தார்.
Similar News
News March 13, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. விலை பாதியாக குறைந்தது

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் முதல் தள்ளுவண்டி உணவுக் கடை வரை மூடப்பட்டதால், கோயம்பேடு சந்தையில் மட்டும் தக்காளி, வெங்காயம், கீரை உள்ளிட்ட காய்கறிகள் 2,000 டன் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளன. இதனால் காய்கறிகளை பாதி விலையில் விற்பனை செய்தாலும், வாங்குவதற்கு ஆளின்றி வீணாவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
News March 13, 2026
எரித்து பொசுக்குவோம்… USA-க்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் ராணுவம் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்கள் மீது மிகச்சிறிய அளவிலான தாக்குதல் நடத்தினாலும் கூட, கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு உதவும் அனைத்து எண்ணெய் & எரிவாயு உள்கட்டமைப்புகளையும் எரித்து அழிப்போம் என்றும் எச்சரித்துள்ளது.
News March 13, 2026
கரூர் வழக்கில் மோதும் செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர்

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதை, அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் குறிப்பிட்டிருந்தார். தனக்கு சம்மன் கொடுத்தால் விஜயபாஸ்கருக்கு என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், சம்மன் வந்தால் நடந்ததை சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே என்று செந்தில் பாலாஜியை மீண்டும் விஜயபாஸ்கர் கேட்டுள்ளார். இது கரூர் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.


