News April 25, 2024

என்னைக் கேலி செய்கிறார்கள்…

image

கடலில் மூழ்கிப் பிரார்த்தனை செய்ததை காங்கிரசார் கேலி செய்வதாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், தான் மிகுந்த பக்தியுடன் கிருஷ்ணரைப் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தார். காங்கிரசார் கேலி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், யது குலத்தோர் என அழைத்துக் கொள்ளும் சமாஜ்வாதியினரும் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்பது வியப்பாக உள்ளது என்றார்.

Similar News

News November 13, 2025

அல்-ஃபலா பல்கலை.,க்கு தடை விதித்த AIU

image

ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலை.,யின் உறுப்பினர் நிலையை தற்காலிகமாக ரத்து செய்வதாக அனைந்திந்திய பல்கலை. கூட்டமைப்பு (AIU) அறிவித்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பின் பின்னணியில், அல்-ஃபலாவில் பணியாற்றிய டாக்டர்கள் உமர் உன் நபி, முசாமில் ஷகீல் இருவரும் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பல்கலை., மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக AIU தெரிவித்துள்ளது.

News November 13, 2025

ஒரு ரூபாய் கூட கட்சியில் பெற்றதில்லை: அண்ணாமலை

image

நான் சுயமாக வணிகம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எனது குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நான் தொழில் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், கோவா உள்ளிட்ட சில பகுதிகளுக்கு SIR பொறுப்பாளராக உள்ள நான், அங்கு செல்வதற்கான செலவையும் நானே செய்ய வேண்டும், கட்சியிலிருந்து ₹1 கூட பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.

News November 13, 2025

ஐபிஎல் டிரேடிங்: டாப் -5 வீரர்களின் லிஸ்ட்

image

ஹர்திக் பாண்ட்யா டிரேடிங்கிற்கு அடுத்தபடியாக இம்முறை ஐபிஎல் வீரர்கள் டிரேடிங் அதிக கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் சொதப்பிய அணிகள், தங்களை வலுப்படுத்திக் கொள்ள வீரர்களை டிரேட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில், அதிக தொகைக்கு டிரேட் செய்யப்பட்ட வீரர்களின் விவரங்களை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

error: Content is protected !!