News November 26, 2025

திருச்சி: கல்வி கடன் முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம் வரும் நவ.,27-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 3, 2025

திருச்சிக்கு பெருமை சேர்த்த சேலை

image

திருச்சி, உறையூர் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் கைத்தறியால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மேலும் தரமான நூல், சாயம், காவிரி நீர் ஆகியவையும் சேலை பிரபலமடையக் காரணமாகும். உறையூர் பருத்தி சேலை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. முன்னதாக மணப்பாறை முறுக்குக்கு 2023இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 3, 2025

திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

image

திருச்சி-பாலக்காடு ரயில் புறப்படும் இடம் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் டிச.,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், வழக்கமாக புறப்படும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படாமல், திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2025

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

error: Content is protected !!