News November 25, 2025
உமராபாத் காவல்நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் உட்கோட்டத்திற்குட்பட்ட உமராபாத் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V சியாமளா தேவி இன்று (நவ.25) நேரில் பார்வையிட்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றியும் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
Similar News
News March 13, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

திருப்பத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 54 பிரதம பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 வறட்சி கால ஊக்கத்தொகையாக மார்ச், ஏப்ரல், மே ஆகாய மூன்று மாதங்களுக்கு உயர்த்தி வழங்கப்படுகிறது என திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். இதனால் நாளொன்றுக்கு சுமார் 35000 லிட்டர் பால் கொள்முதல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 13, 2026
ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்-13) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தெரிவித்துள்ளார். இந்த முகாமில் முன்னணி நிறுவனங்கள் பலர் கலந்து கொள்கின்றனர். கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு முதல் +2 தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 13, 2026
வாணியம்பாடி அருகே உடல் சிதறி பலி!

வாணியம்பாடி அருக வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் சுப்பிரமணி (66). இவர், வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


