News November 25, 2025

சற்றுமுன்: விடுமுறை.. வந்தது HAPPY NEWS

image

கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு டிச.3 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த விழாவிற்காக தமிழக அரசு ஏற்கெனவே சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், டிச.3, 4-ல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தி.மலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Similar News

News March 31, 2026

நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

News March 31, 2026

100 கோடி GB-ஐ தாண்டிய மொபைல் டேட்டா பயன்பாடு

image

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2025-ல் ஒரு நபரின் சராசரி மாதாந்தர மொபைல் டேட்டா பயன்பாடு 31 GB ஆக அதிகரித்துள்ளது. இது 2024-ல் 27.5 GB ஆக இருந்தது. நோக்கியாவின் Mobile Broadband Index 2025 அறிக்கையின்படி, நாட்டின் ஒருமாத டேட்டா பயன்பாடு 27 exabyte-களை (1 exabyte = 100 கோடி GB) தாண்டியுள்ளது. AI பயன்பாடு, 4K வீடியோ, கேமிங் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

News March 31, 2026

உதயநிதி, சபரீசனை அட்டாக் செய்த EPS

image

2 வருடங்களுக்கு முன் அமைச்சர் PTR பேசியதாக ஒரு ஆடியோ லீக் ஆனது. அதில் உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில் தங்கள் மூதாதையரை விட அதிகம் சம்பாதித்துவிட்டனர், சுமார் ₹30,000 கோடியை என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறி வருவதாக இடம்பெற்றிருந்தது. இதனை சிவகாசியில் குறிப்பிட்ட EPS, ஒரே ஆண்டில் ₹30,000 கோடி என்றால், 5 ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!