News November 25, 2025
குடும்ப நல கருத்தடை சிகிச்சை பிரச்சார ஊர்தி

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் புதிய உணர்வு மாற்றத்திற்கான முன் முயற்சி 4.0 துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைத்ததை தொடர்ந்து குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த பிரச்சார ஊர்தி இன்று (நவ.25) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவங்கி வைக்கப்பட்டது.
Similar News
News March 18, 2026
ஆம்பூரில் பட்டப்பகலில் பயங்கரம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நாச்சியார்குப்பத்தைச் சேர்ந்த தேவகி என்ற மூதாட்டி, ஆம்பூர் பஜார் பகுதியில் நடந்து சென்றார். அப்போது இருட்டான பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையைப் பறித்துத் தப்பினர். இதுகுறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News March 18, 2026
திருப்பத்தூர்: 7ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி!

ஜோலார்பேட்டை; சின்ன மூக்கனூர் சேர்ந்த புருஷோத்தமன் இவர் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று (மார்.17) மாணவனின் பெற்றோர்கள் தேர்வுக்கு படிக்காமல் ஏன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் என கேட்டு கண்டித்தனர். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் இருந்த மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
News March 18, 2026
திருப்பத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் உள்ள அனைத்துக் காவல் அதிகாரிகளும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.


