News November 25, 2025

டிசம்பர் 17: தேதி குறித்தார் அன்புமணி

image

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி டிச.17 சென்னையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார். வாய்ப்புகள் கிடைத்தும் திமுக கணக்கெடுப்பை நடத்தவில்லை என்ற அவர், ஸ்டாலின் அரசு சமூகநீதியை சிதைத்து, படுகொலை செய்வதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ் சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க விருப்பமில்லாததால் தான் கணக்கெடுப்பை நடத்த மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News March 20, 2026

ஸ்மார்ட்போன் சந்தைக்கு திரும்பும் அமேசான்

image

12 ஆண்டுகளுக்கு பிறகு Amazon மீண்டும் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு திரும்புகிறது. 2014-ல் வெளியிட்ட FirePhone தோல்வி அடைந்ததால் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் தற்போது AI அம்சங்களுடன் ‘Transformer’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

News March 20, 2026

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறீர்களா? உஷார்!

image

தற்போதைய சூழலில், வேலை காரணமாக நாம் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறோம். இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் அமர்ந்திருப்பதால் வளர்சிதை மாற்றம், செரிமான செயல்முறைகள் மெதுவாகின்றன *குடல் சுருக்கங்கள் குறைவதால் கழிவுகள் நகர்வது கடினமாகிறது *குடலில் உள்ள நுண்ணுயிர்கள் சமநிலை பாதிக்கப்படுகிறது *மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் ஏற்படுகிறது.

News March 20, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்!

image

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT

error: Content is protected !!