News November 25, 2025

கனமழை வெளுக்கப் போகுது.. பறந்தது அலர்ட்

image

தமிழகத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவ.28 முதல் நவ.30 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளது. நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும், மீட்பு படையினரை உஷார்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.

Similar News

News March 21, 2026

இவர் இன்னொரு துரந்தர்

image

நாட்டிற்காக உயிர்நீத்த வீரத் திருமகன்களில் மேஜர் மோகித் சர்மாவும் ஒருவர். 1999-ல் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் பணி செய்த அவர், 2004-ல் இந்திய ராணுவத்தின் பிணைக் கைதி போல் நடித்து ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்குள் ஊடுருவி தீவிரவாதிகளை கொல்ல உதவினார். 2009-ல், 4 பயங்கரவாதிகளை கொன்ற அவர் படுகாயங்களால் வீரமரணமடைந்தார். இவரது வீரத்தையும், தியாகத்தையும் கெளரவித்து அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

News March 21, 2026

CM ஸ்டாலின் செயலிழந்து விட்டார்: எல்.முருகன்

image

TN-ல் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக எல்.முருகன் கூறியுள்ளார். போலீஸை கட்டுப்பாட்டில் வைத்துள்ள CM ஸ்டாலின் செயலிழந்துவிட்டதாகவும், தனக்கு கீழ் இயங்கும் துறையில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். 5 வருட திமுக ஆட்சியில் கஞ்சா புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதால் சொல்லி மாளாத துயரத்தை மக்கள் அனுபவிப்பதாகவும் கூறினார்.

News March 21, 2026

தங்கம் விலை தடாலடியாக குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

மார்ச்சில் மட்டும் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹17,240 குறைந்து நடுத்தர மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. தொடர்ந்து விலை சரியும் நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டின் இறுதி வரை தங்கம் பெரியளவில் விலையேற்றத்தை சந்திக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், 2027-ல் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்றம் (BULL RUN) இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

error: Content is protected !!