News November 25, 2025

கருவிலேயே குழந்தை Strong ஆகணுமா? DO THIS!

image

கர்ப்பிணிகளே, உங்களுக்கு பிறக்கும் குழந்தை Strong-ஆ இருக்கணுமா? அப்போ இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள். அதிக நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த ராகியை அன்றாடம் உணவில் சேருங்கள். நட்ஸ், தயிர், அத்திப்பழம், பட்டாணி, கீரை வகைகளை உணவில் சேர்ப்பது மிக மிக அவசியம். இவற்றை சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு நல்லது என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

Similar News

News November 26, 2025

அரசியலமைப்பை பாதுகாப்பது என் கடமை: ராகுல்

image

இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட புனித வாக்குறுதி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து ஒவ்வொரு நபருக்கும் சமஉரிமை, மரியாதை, நீதி கிடைப்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்வதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பது தன்னுடைய கடமை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News November 26, 2025

BIG BREAKING: விஜய்யை சந்தித்தார் செங்கோட்டையன்

image

அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த கே.ஏ.செங்கோட்டையன் சற்றுமுன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். நாளை தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். காலையில், செங்கோட்டையன் தனது அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்த பிறகு, திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

News November 26, 2025

6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6, 6 மிரட்டல் அடி

image

சையது முஷ்டாக் அலி கோப்பையில் குஜராத் கேப்டன் உர்வில் படேல் 31 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அவர் மொத்தமாக 37 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119* ரன்களை குவித்தார். முதலில், சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 182/9 ரன்கள் எடுத்தது. உர்வில் படேலின் அபாரமான ஆட்டத்தின் மூலம், 12.3 ஓவர்களில் குஜராத் எளிதில் வெற்றி பெற்றது. 2024-ம் ஆண்டு தொடரிலும், உர்வில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

error: Content is protected !!