News November 25, 2025
உலகை அச்சுறுத்தும் டாப் 10 எரிமலைகள்!

எரிமலையின் சீற்றத்தை இந்தியா பெரிதாக கண்டதில்லை. ஆனால், உலகளவில் பல எரிமலைகள் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகின்றன. அப்படி உலகை அதிரவைத்து கொண்டிருக்கும் டாப் 10 பயங்கரமான, மிகவும் ஆக்டிவான எரிமலைகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கம் Swipe செய்து அவற்றை பாருங்க. உங்களை மிகவும் பயமுறுத்திய இயற்கை சீற்றம் எது?
Similar News
News March 5, 2026
பாஜகவால் அதிமுக டெபாசிட் இழக்கும்: தா.மோ.அன்பரசன்

திமுக- காங்., கூட்டணியை அதிமுகவினரும், அதிமுக – பாஜக கூட்டணியை திமுகவினரும் மாறிமாறி விமர்சனம் செய்கின்றனர். இந்நிலையில், அதிமுக தனியாக நின்றால், ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கும் என்றும், பாஜகவுடன் சேர்ந்ததால், பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலை வரும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது; ஆனால், மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என்றார்.
News March 5, 2026
கூடுதல் வரியை திரும்ப கொடுங்க.. US அதிபருக்கு ஷாக்!

US அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு வர்த்தக நீதிமன்றம் அதிர்ச்சி அளித்துள்ளது. அவசரகால அதிகார சட்டத்தின் கீழ் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், சுமார் ₹16 லட்சம் கோடியை திரும்ப அளிக்கும் படி உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த தீர்ப்பு அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
News March 5, 2026
70 தொகுதிகளா? பாஜகவின் பிளானுக்கு EPS பதில்

மொத்தமாக 70 தொகுதிகளை கொடுங்கள், நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல், EPS-யிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு 25 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு தாங்களே சீட் ஒதுக்கீடு செய்வதாக EPS கூறிவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முரண்பாட்டாலேயே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்தது பாஜகவுக்கு 30 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாம்.


