News November 25, 2025

ஆவடி: மனநல காப்பகத்தில் பெண் மர்ம மரணம்

image

திருவள்ளூர்: ஆவடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று(நவ.24) மர்மமான முறையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் மகன், தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 6, 2026

மாதவரத்தில் தட்டி தூக்கிய திமுக!

image

மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் R. ராஜேந்திரன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சுதர்சனம் முன்னிலையில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

News March 6, 2026

திருத்தணியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 190 போதை மாத்திரைகளை கடத்தி வந்த அரக்கோணம் தாலுக்கா, தணிகைப் போரூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரைப் போலீசார் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

News March 6, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!