News November 25, 2025
தேனியில் 100 -ஐ தொட்ட தக்காளி விலை

பெரியகுளம் சந்தையில் தினமும் 5 டன்னிற்கும் அதிகமாக தக்காளி விற்பனையாகும். தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 2 தினங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 70 என விலை உயர்ந்தது. தற்போது பெங்களூருவிலிருந்து ‘சாகோ’ என்ற ரகம் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு அவை கிலோ 100 என விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News March 14, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 13.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 13, 2026
தேனி: மனைவி உள்ளிட்ட இருவருக்கு இரட்டை ஆயுள்

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி அனீஸ் பாத்திமா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த ஹபிபுல்லாவை 2019-ம் ஆண்டு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் ஜெயபாண்டி, அனீஸ் பாத்திமா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்
News March 13, 2026
தேனி: துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் பகுதிகளில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் துப்பாக்கியை உடனடியாக ஒப்படைக்க வேண்டு எனவும் தெரிவித்துள்ளனர்.


