News November 25, 2025
விழுப்புரம்: மகனே தாய்க்கு எமனாகிய கொடூரம்!

விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நேற்று (நவ.25) முன் தினம் இவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டி கேட்ட தாய் விஜயலட்சுமியை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தாய் முண்டியம்பாக்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 20, 2026
விழுப்புரம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

விழுப்புரம் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News March 20, 2026
விழுப்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்!

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சென்னை, எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு இன்று(மார்ச் 20) சிறப்பு ரயில் இயக்கத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இரவு 11:45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பகல் 1.00 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு மார்க்கமாக 22ஆம் தேதி அதே ரயில் அங்கிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
News March 20, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு 7 தொகுதிகளில் தீவிரமான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, பாதுகாப்பு, செலவின கண்காணிப்பு, ஓட்டுச்சாவடி வசதிகள் மற்றும் வாக்காளர் சேவைகள் உறுதி செய்யப்பட்டன.


