News April 25, 2024
₹3.20 கோடி மதிப்புடைய பழைய ₹2000 மாற்றம்

திருப்பதி தேவஸ்தானம் ₹3.20 கோடி மதிப்புடைய பழைய ₹2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளது. கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் ₹3.20 கோடி அளவிற்கு பழைய ₹2000 நோட்டுகள் இருந்துள்ளது. ஆறு தவணையாக இதை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ள தேவஸ்தானம், தேவஸ்தான லாக்கரில் ₹49.70 கோடி அளவிற்கு பழைய ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Similar News
News September 21, 2025
GST 2.0 என்பது ஒரு புரட்சி: நிர்மலா சீதாராமன்

GST 2.0 என்பது சீர்திருத்தம் அல்ல, புரட்சி என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், தீப்பெட்டி தொழிலில் அச்சாணிகளாக பெண்கள் திகழ்வதால், அவர்களின் நலன்களுக்காக திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 375 பொருள்களுக்கு 10% GST வரியை குறைத்து, PM மோடி சார்பில் தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
2027-ல் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை

மும்பை – அகமதாபாத் இடையே 2027 டிசம்பரில் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் வருகையின் மூலம், 9 மணி நேரமாக இருக்கும் பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் எனவும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பதிவு செய்ய வெண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
இந்த பெருமை எனக்கு மட்டும் உரியது அல்ல: மோகன்லால்

சினிமாவில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது குறித்து மோகன்லால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பெருமை தனக்கு மட்டுமல்ல, இத்தனை வருட பயணத்தில், தன்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் உரியது எனவும், அவர்களே ஊக்கம் தந்து தன்னை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அங்கீகாரத்தை ஆழ்ந்த நன்றியுடனும், முழுமனதுடனும் ஏற்றுக்கொளவதாக தெரிவித்துள்ளார்.