News November 25, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..

Similar News

News December 3, 2025

தஞ்சாவூர்: ஒரே நாளில் 111 வீடுகள் இடிந்து சேதம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 111 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் 73 குடிசை வீடுகளும், 38 ஓட்டு வீடுகளும் அடங்கும். மேலும், 11 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தஞ்சை: தண்டவாளத்தில் இறந்து கிடந்த மூதாட்டி

image

தஞ்சாவூர் – ஆலக்குடி ரயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று (டிச.02) 70 வயது மூதாட்டி ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து, அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ரயில்வே இருப்புப் பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உயிரிழந்த மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!