News April 25, 2024

கடலூரில் பக்தர்களுக்கு அன்னதானம்

image

திருப்பாதிரிப்புலியூர் பாரதிதாசன் நகரில் உள்ள புட்லாயி அம்மன் கோவிலில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அதிமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கடலூர் சி.கே.எஸ். கார்த்திகேயன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 10, 2026

கடலூர்: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 300 மாணவர்கள் ஆப்சென்ட்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 30 ஆயிரத்து 83 மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், மொத்தமாக 300 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில் 29 ஆயிரத்து 783 மாணவர்கள் மட்டும் தேர்வெழுதினர்.

News March 10, 2026

காரைக்காடு: தொழிலாளி உயிரை பறித்த நாய்

image

கடலூர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வம்(58). இவர் பைக்கில் சின்னபிள்ளையார்மேடு பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் திடீரென பிரேக் பிடித்தார். இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த செல்வம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

News March 10, 2026

கடலூர்: காவல்துறை அத்துமீறுகிறதா? MLA கேள்வி

image

பண்ருட்டி MLA வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மானாமதுரை பகுதியில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. என தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை அத்துமீறுகிறதா? இளைஞர் ஆகாஷ் மரணத்திற்கு யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!