News November 25, 2025

ஈரோடு: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

image

ஈரோடு மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News November 28, 2025

ஈரோட்டில் கொடூர கொலை சம்பவம்!

image

ஈரோடு சூளை எல்விஆர் காலனியை சேர்ந்தவர் கமலம் 60. இவருடைய மகன் புதுச்சேரியில் வேலை செய்வதால் கமலம் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கமலம் பிணமாக கிடந்தார். மேலும் ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் கமலத்தை கொன்று 5 பவுன் நகையை கொள்ளை அடித்தது தெரியவந்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க டிஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைப்பு.

News November 28, 2025

கோபியில் களம் இறங்கும் ஈபிஎஸ்!

image

கோபிசெட்டிபாளையம் MLAவாக இருந்த செங்கோட்டையன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சூழலில், அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்து, பின்னர் நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைத்துள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News November 28, 2025

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

image

பெருந்துறை துடுப்பதி சாணார்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் (28). எலக்ட்ரீசியன். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் காணப்பட்டார். தன்னுடன் பழகியவர்களிடம் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தமிழரசன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!