News April 25, 2024
யாருக்கு அந்த வாய்ப்பு..?

விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தைக் கைப்பற்றப் பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகத் திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதலில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியானாலும் உறுதியாகவில்லை. இந்நிலையில், செவன் ஸ்க்ரீன், பேஷன் ஸ்டுடியோஸ், ஏஜிஎஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தைக் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News February 1, 2026
அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!

U19 WC பாக்.,க்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய பாக்., அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்களில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸி., ஆப்கன் & இங்கி., ஆகியவை ஏற்கெனவே அரையிறுதிக்கு தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.
News February 1, 2026
கருப்பு, சிவப்பு, நீலம் ஒளிர வேண்டும்: CM ஸ்டாலின்

சமத்துவ சமுதாயம் அமைப்பதே திராவிட இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இருக்கும் ஒரே இலக்கு என்று இந்திய கம்யூ., கட்சியின் நூற்றாண்டு விழாவில் CM ஸ்டாலின் பேசியுள்ளார். கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் நிலைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த ஒற்றுமை தேவை எனக் கூறிய அவர், திமுக, கம்யூனிஸ்ட் இடையிலான இந்த தோழமை பாசிசத்தை, சர்வாதிகாரத்தை வேரறுக்கும் என்றார்.
News February 1, 2026
விஜய் + காங்., கூட்டணி.. முடிவை தெரிவித்த நாஞ்சில் சம்பத்

விஜய்யுடன் கூட்டணி வைக்க காங்., விரும்புவதை போல, விஜய்யும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார் என நாஞ்சில் சம்பத் EXCLUSIVE தகவலை தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவை தங்கள் கையில் வைத்திருக்க விஜய் முகமாகவும், முதுகெலும்பாகவும் இருப்பார் என காங்., நம்புகிறது. இக்கூட்டணி அமைந்தால் இரு கட்சிகளுக்கும் லாபம் எனக் கூறிய அவர், விரைவில் விஜய் கூட்டணி முடிவை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


