News November 25, 2025
திருவாரூர்: ரூ.21 கோடியில் புதிய சாலை

மன்னார்குடி பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்ற இடங்களில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ2.5 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 19 கிலோமீட்டர் தூர சாலைகளை மேம்படுத்துவதற்கு ரூபாய் 21 கோடி நிதி ஒதுக்கீடு அரசிடம் கோரப்பட்டுள்ளது. அரசின் நிதி உதவி பெறப்பட்டதும் பணிகள் துவங்கப்படும் என நகர மன்ற தலைவர் சோழராஜன் நேற்று (நவ. 24) நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
Similar News
News March 28, 2026
திருவாரூர்: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…
News March 28, 2026
திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் விடுமுறை அறிவிப்பு

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எல்.எப் 2 மற்றும் எல்.எப் 3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News March 28, 2026
திருவாரூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


