News November 25, 2025
BLO-வை வீட்டில் அடையுங்கள்: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

SIR படிவங்களை எடுத்துவரும் BLO-க்களை வீட்டில் கட்டிவையுங்கள் என ஜார்க்கண்ட் காங்., அமைச்சர் இர்ஃபான் அன்சாரி பேசியுள்ளார். வாக்களர் பெயர்களை நீக்குவதற்காகவே அவர்கள் வீடுதேடி வருவதாக கூறிய அவர், SIR-க்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், BLO-க்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
வேலூரில் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம்!

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் டிசம்பர் 2025 முதல் மாதத்தின் புதன்கிழமைகளில் நடைபெற இருக்கிறது. இது அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடைபெற உள்ளது. மேலும், வெள்ளிக் கிழமைகளில் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.27) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
News November 27, 2025
அரசியல் முன்னோடிகளுக்கு செங்கோட்டையன் மரியாதை

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அண்ணா, MGR மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தவெகவின் முன்னணி தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் விஜய்யுடன் இணைந்துள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
News November 27, 2025
இரவு 7 மணிக்குள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்?

ஒரு மாதத்திற்கு நீங்கள் இரவுநேர உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு பாருங்கள். உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவது, செரிமானம் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து சீக்கிரமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


