News November 25, 2025
இந்த நாள்களில் மிக மிக கவனம் மக்களே!

காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு நவ.28-ல் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.29-ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட், டிச.1-ல் திருவள்ளூருக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.26, 27 ஆகிய 2 நாள்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
Similar News
News March 6, 2026
BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News March 6, 2026
PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.
News March 6, 2026
சஞ்சு சாதனை… ஆர்ச்சர் வேதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் டி20 WC வரலாற்றில் அதிக சிக்சர்கள்(16) அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், டி20 WC நாக் அவுட் போட்டியில் 50+ ரன்களை வாரி வழங்கிய பவுலர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆர்ச்சர் (61 ரன்கள்) படைத்துள்ளார்.


