News November 25, 2025
ராமர் கோயிலில் பிரம்மாண்ட கொடியேற்று விழா

ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று கொடியேற்றும் விழா நடைபெற உள்ளது. PM மோடி இவ்விழாவில் பங்கேற்று, கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
சட்டவிரோத பணப் பரிமாற்றம்.. ஏ.எம்.மூர்த்தி கைது

₹25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தியை ED கைது செய்துள்ளது. கடந்த 2 நாள்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் இக்கட்சி திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. சமீபத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் மூர்த்தி கலந்துகொண்டார்.
News March 13, 2026
BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹1,19,200-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹14,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1200, இன்று ₹560 என 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ₹1,760 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமில்லை.
News March 13, 2026
சிலிண்டரில் இதை கவனிக்கவும்!

சிலிண்டரில் உள்ள குறியீடு, அதனை எப்போது வரை பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது. A,B,C,D ஒவ்வொரு காலாண்டையும், எண்கள் ஆண்டையும் குறிக்கும். A(Jan/Feb/Mar), B(Apr/May/Jun), C(Jul/Aug/Sep), D(Oct/Nov/Dec). உதாரணமாக சிலிண்டரில் A-27 என்றால் மார்ச் – 2027 வரை பயன்படுத்தலாம். பழைய சிலிண்டரை பயன்படுத்தினால் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, சிலிண்டரை வாங்கும்போது இதனை கவனிக்கவும்.


