News November 25, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹93,760-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 15, 2026
ஜனநாயகன் படக்குழு செய்தது தவறு: பவன் கல்யாண்

ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையில் NDA-வுக்கு தொடர்பில்லை என ஆந்திர DCM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சென்சார் விஷயத்தில் ஜனநாயகன் படக்குழு நீதிமன்றத்தை நாடியது தவறு என்றும், நீதிமன்றத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் பிரச்னை முடிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் CBI, CBFC போன்ற அமைப்புகளில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.
News March 15, 2026
BIG BREAKING: அதிமுக கூட்டணியில் இணைகிறார்

நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் சற்றுநேரத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவிக்க உள்ளார். ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, தற்போது 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
தேர்தல் நடத்தை விதி என்றால் என்ன?

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) என்பது தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காக வகுக்கப்படும் வழிகாட்டுதல்கள் ஆகும். ECI தேர்தலை அறிவித்தவுடன் இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிடும். அரசு அதிகாரம், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்வது நடத்தை விதியின் முக்கிய நோக்கம்.


