News November 25, 2025

திருவாரூர்: மழை நீரில் மூழ்கிய 700 ஏக்கர் நெற்பயிர்

image

முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ச்சியாக கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதில் இன்று காலை வரை விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வடகாடு கோவிலூர், ஆலங்காடு பகுதியில் சுமார் 700 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கியது. கடன் வாங்கி ஏக்கருக்கு 30ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து சாகுபடி செய்துள்ளதால் கவலையடைந்த விவசாயிகள் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

Similar News

News March 13, 2026

தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அமைக்கப்படும் கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் அரசு அலுவலர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 13, 2026

திருவாரூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

திருவாரூர்: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

error: Content is protected !!