News November 25, 2025

டிச.15 வரை கெடு.. OPS-ன் பிளான் இதுவா?

image

தேர்தல் பற்றி டிச.15-ல் இறுதி முடிவு எடுக்கப்படும், அதற்குள் திருந்துங்கள் என EPS-க்கு OPS கெடு விதித்துள்ளார். ஆனால், உண்மையில் இது EPS-க்கான கெடு அல்ல என கூறப்படுகிறது. அதாவது, ஒத்த கருத்துடையவர்களை இணைத்து NDA கூட்டணியில் மீண்டும் சேர OPS திட்டமிடுகிறாராம். டிடிவியிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதனால்தான் டிச.15-ல் முடிவெடுக்கப்படும் என OPS கூறுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 17, 2026

விஜய்யுடன் கூட்டணி.. புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்

image

புதுச்சேரி அரசியல் களம் கடைசி நேரத்தில் திருப்பத்தை சந்தித்துள்ளது. NR காங்., – பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லஜகவை கூட்டணியில் சேர்த்தால், தாங்கள் வெளியேறுகிறோம் என ரங்கசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என NR காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் அறிவித்துள்ளார்.

News March 17, 2026

14 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

image

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் 14 வயது சிறுமி ஒருவருக்கும் அருண் விஜய்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளைஞர் அத்துமீறியதால் அச்சிறுமி இப்போது கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர். தற்போது அருண் விஜய் கம்பி எண்ணுகிறார். இதெல்லாம் தேவை தானா?

News March 17, 2026

IPL 360: தோனி 5 or 6-ல் பேட்டிங் செய்யணும்.. ABD!

image

*IPL 2026-ல் CSK அணிக்காக தோனி, 5 அல்லது 6-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என AB டிவில்லியர்ஸ் வலியுறுத்தியுள்ளார் *இந்த ஆண்டு DC அணியில் ஓப்பனராக KL ராகுல் களமிறங்கவுள்ளார் *காயம் காரணமாக, RCB பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரு IPL போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது *KKR கேப்டனாக அஜிங்கியா ரஹானே தொடருவார் என அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!