News November 25, 2025
திருப்பூரில் இளஞ்சிறாருக்கு நூதன தண்டனை

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்டது தாடிகார் முக்கு பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கமலராஜா என்பவர் கொலை வழக்கில் இளம் சிறார் பிடிக்கப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இளைஞர் நீதி குழும நடுவர் செந்தில்ராஜா. இளஞ்சிரார் 6 மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனை அவசர பிரிவில் மருத்துவர்கள் கூறும் வேலையை செய்ய தண்டனை விதித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
திருப்பூர்: BOI வங்கியில் வேலை! CLICK

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (BOI), இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இங்கு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். (SHARE)
News November 27, 2025
திருப்பூர் TVK கோட்டையாகுமா?

ADMK-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். அவர் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தை TVK-வின் கோட்டையாக்குவாரா செங்கோட்டையன். நீங்க சொல்லுங்க மக்களே.
News November 27, 2025
திருப்பூர்: FB, WhatsApp-ல் வரும் ஆபத்து.. உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


