News November 25, 2025

புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

image

புதுவை கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று(நவ.25) நடைபெற உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 3 வரை பீமன் நகர் ஒரு பகுதி அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞான தியாகு நகர், ராகவேந்திரா நகர், பிவிபி நகர் ஒரு பகுதி, தட்டாஞ்சாவடி ஒரு பகுதி, கவுண்டன் பாளையம் ஒரு பகுதி, இசிஆர் பழனிராஜா உடையார் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 12, 2026

புதுவை: ஊரக வளர்ச்சி துறை சார்பில் நலத்திட்ட உதவி

image

புதுவை கோர்க்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 12, 2026

புதுவை: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

புதுச்சேரி: பாஜகவில் இணைந்த 300-க்கும் மேற்பட்டோர்

image

மண்ணாடிப்பட்டு, பெரியபேட் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் முருகன், குப்பன் மற்றும் சாந்தப்பன் ஆகியோர் தலைமையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா பாஜக நிர்வாகி ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

error: Content is protected !!