News November 25, 2025
தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..
Similar News
News March 13, 2026
காவ்யா மாறனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

The Hundred தொடருக்காக பாக். வீரர் அப்ரார் அகமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது விமர்சனத்தை பெற்றுள்ளது. ‘Shame on you kavya maran’ என்ற ஹேஷ்டேக் X தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் நோக்கில் மோசமாக சித்தரித்த மீமை அப்ரார் ஷேர் செய்திருந்தார். முன்னதாக, <<19370151>>CSK<<>>-க்கு சன் குழுமம் நோட்டீஸ் அனுப்பியதும் விமர்சனத்தை பெற்றது.
News March 13, 2026
அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. பரபரப்பு தகவல்

திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு செல்லும் முடிவை தவெக எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த நடத்திய மா.செ., கூட்டத்தில், கூட்டணி செல்வதால் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, விஜய் வெல்ல வேண்டும் என பலரும் கூறினார்களாம். அத்துடன், கூட்டணியில் 50-60 சீட்கள்+விஜய்க்கு DCM பதவி கிடைத்தால் நல்லது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தனித்து போட்டியிடவும் அறிவுறுத்தினராம்.
News March 13, 2026
இவருடைய கட்சியில் தான் சசிகலா சேர்ந்துள்ளார்!

இன்று சசிகலா <<19370263>>அஇபுதமமுக<<>> என்ற கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இக்கட்சியை எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பி.சக்கரவர்த்தி என்பவர் தொடங்கி இருந்தார். மதுரையை சேர்ந்த இவர், 2012-ல் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். 2016-ல் இந்த கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார்.


