News April 25, 2024
மோடி ஆட்சியில் இருக்க மாட்டார்

மக்களவைத் தேர்தலில் மோடி தோல்வியடையப் போவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, பிரதமர்களாக நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, மன்மோகன்சிங் சிறப்பாக செயல்பட்டதாகவும், அவர்கள் காலத்தில் கட்டமைத்த அரசு நிறுவனங்களை மோடி ஏலத்தில் விற்று வருவதாகவும் சாடினார். ஜூன் 4 தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவும், மோடியும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
Similar News
News January 26, 2026
மலேசியாவில் 500 தமிழ்ப் பள்ளிகள்: PM மோடி

நமது இந்தியச் சமூகம் மலேசியாவிலும் கலாசாரம், பண்பாட்டை போற்றுகின்றனர் என PM மோடி கூறியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் உள்ளதாகவும், அவற்றில் தமிழ் பாடத்துடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பிற பிராந்திய மொழிகளுக்கும் அங்கு முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்டார்.
News January 26, 2026
அரசியலமைப்பின் மாண்பை காப்போம்: EPS, விஜய் வாழ்த்து

நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி EPS, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இன்று உறுதியேற்போம் என EPS குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம் என விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
News January 26, 2026
TN பெருமையை பறைசாற்றிய அலங்கார ஊர்திகள் (PHOTOS)

சென்னையில் நடைபெற்ற <<18959672>>குடியரசு தின நிகழ்ச்சியில்<<>>, தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை கவர்னர் RN ரவி, CM ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.


