News November 25, 2025
புதுவை: வெளிநாட்டு மாணவரை தேடி பிடித்த போலீசார்

ருவாண்ட நாட்டை சேர்ந்த சேமா மன்சி பபரீஷ்(35) என்பவர் சிதம்பரம் அண்ணாமலை ப.கழகத்தில் பட்டம் படித்த பின், புதுவை ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார். இவரது விசா காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்த நிலையில், விசா புதுப்பிக்கப்படவில்லை. புதுவையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர்கள் இவரை தேடிய நிலையில், முதலியார்பேட்டை தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரிந்து அவரை நேற்று போலீசார் பிடித்தனர்.
Similar News
News March 12, 2026
புதுச்சேரி: சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல்!

புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றும் வேணுகோபால் (53), மணவெளி விக்டோரியா நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன் லாரி சென்றபோது சிமெண்ட் தரை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் முருகனை வேணுகோபால் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன் மற்றும் அவரது சகோதரர் சுப்பிரமணியன் இணைந்து வேணுகோபாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
News March 12, 2026
புதுச்சேரி: பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.