News November 25, 2025
குமரி: சப் இன்ஸ்பெக்டரை கம்பியால் தாக்கிய ரவுடி

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஜில் எட்வின் தாஸ். இவர் மருந்து கோட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கூறிய போது, அந்த நபர் ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளரை கம்பியால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் (30) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் இடமாற்றம்

குமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(வளர்ச்சி) பணியாற்றி வந்த சுசிலா பீட்டர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பழனிவேல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் 47 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
News November 28, 2025
குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)


