News November 25, 2025
கடலூர்: சோபாவில் இருந்து தவறி விழுந்து பலி

சிதம்பரம் வடக்கு வடுகர் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சுந்தரராஜன் (58). இவர் குடிபோதையில் தனது வீட்டின் சோபாவில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தும் அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 18, 2026
கடலூர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 18, 2026
கடலூர் மாவட்ட வாக்காளர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்கள் 48,932 பேர் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 13 ஆயிரத்து 125 பேரும், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 25 பேரும் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 20,379 பேர் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு Saksham மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பில் எளிதாக பங்கேற்க உதவுவதற்காக இந்த செயலியை மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம், போக்குவரத்து வசதி கோரலாம், சக்கர நாற்காலிகள் போன்ற உதவிகளை முன்பதி செய்யலாம், தேர்தல் நாளில் தேவையான உதவிகளை முன்கூட்டியே பெற இந்த செயலி உதவும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


